கூடுவாஞ்சேரியில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்; முதியவர் பலி

கூடுவாஞ்சேரியில் மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் முதியவர் பலியானார்.
Published on

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி கண்ணகி தெரு, திருமலை நகர் பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 65). இவர் நேற்று முன்தினம் இரவு கூடுவாஞ்சேரியில் இருந்து மாடம்பாக்கம் செல்லும் மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

மேம்பாலத்தில் இருந்து வலது புறமாக திரும்பும் போது அதே திசையில் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் கண்ணிமைக்கும் நேரத்தில் அருணாச்சலத்தின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com