கூடுவாஞ்சேரியில் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி சீனிவாசபுரம் கே.கே.நகர் பகுதியை சேர்ந்த பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை.
Published on

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி சீனிவாசபுரம் கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் ரகுவரன் (வயது 29), எம்.பி.ஏ., பட்டதாரியான இவர் நேற்று மாலை வீட்டில் இருந்தார். அப்போது அவரது மனைவி குழந்தையை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக சென்றார்.

பின்னர் பள்ளியில் இருந்து மீண்டும் வீட்டிற்கு மனைவி வந்த போது வீட்டின் கதவு உள்தாழ்பாள் போடப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அங்கு கணவர் ரகுவரன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.

உடனே அவரை மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் ரகுவரனின் உடலை பரிசோதனை செய்தனர். அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்,.

இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து ரகுவரனின் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com