ஓசூரில், கள்ளக்காதல் ஜோடி தீக்குளிப்பு

ஓசூரில் கள்ளக்காதல் ஜோடி தீக்குளித்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published on

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பிருந்தாவன் நகரை சேர்ந்தவர் பூர்ணிமா (வயது 36). இவருக்கு திருமணம் ஆகி கணவர் உள்ளார். அதே பிருந்தாவன் நகரைச் சேர்ந்தவர் அனிபுதீன் (25). இந்தநிலையில் பூர்ணிமாவுக்கும், அனிபுதீனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக் காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

கடந்த சிலநாட்களாக அவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்தாக தெரிகிறது. சம்பவத்தன்றும் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மனமுடைந்த இருவரும் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தங்கள் உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டனர்.

உடலில் தீ பற்றியதும் அவர்கள் இருவரும் வலியால் அலறி துடித்தனர். இந்த அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடிச் சென்றனர். பின்னர் அவர்கள் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பூர்ணிமா, அனிபுதீன் ஆகிய இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து இருவரும் சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com