கள்ளக்குறிச்சியில், போலியோ சொட்டு மருந்து முகாம் குறித்த ஆலோசனை கூட்டம்

கள்ளக்குறிச்சியில் போலியோ சொட்டு மருந்து முகாம் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் கிரண்குராலா தலைமையில் நடந்தது.
Published on

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வருகிற 19-ந்தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதனையொட்டி அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்புகுழு ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கிரண்குராலா தலைமை தாங்கினார்.மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா, சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த், திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் சாய்வர்தினி, மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பொற்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் கிரண்குராலா பேசும் போது, வருகிற 19-ந்தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம்களில் 5 வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டு மருந்து போடவேண்டும். முகாம் நடைபெறும் இடங்களுக்கு வாகன வசதி, மின்சாரம் வசதி செய்வதை முன்கூட்டியே உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

இந்த கூட்டத்தில் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com