கன்னியாகுமரியில் வளர்ச்சி பணிகளை பேரூராட்சிகளின் இணை இயக்குனர் ஆய்வு

கன்னியாகுமரியில் வளர்ச்சி பணிகளை பேரூராட்சிகளின் இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரியில் வளர்ச்சி பணிகளை பேரூராட்சிகளின் இணை இயக்குனர் ஆய்வு
Published on

கன்னியாகுமரி,

கன்னியாகுமரியில் கடற்கரையை அழகு படுத்தும் பணி ரூ.32 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக காட்சி கோபுரம் முதல் சன்செட் பாயிண்ட் கடற்கரை வரை இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கடற்கரையில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து கடலின் அழகை ரசிக்க அலங்கார நிழற்குடைகள், அலங்கார கற்கள் பதிக்கப்பட்ட தளங்கள் உள்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் நடக்கிறது. இந்த பணிகளை பேரூராட்சிகளின் இணை இயக்குனர் மலையமான் திருமுடிக்காரி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர் பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் அவர், திடக்கழிவு மேலாண்மை பூங்கா அமைந்துள்ள கன்னியாகுமரி பரமார்த்தலிங்கபுரத்துக்கு சென்று அங்கு குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் பணிகளை பார்வையிட்டார். கன்னியாகுமரி பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரிக்கப்படுகிறது. இந்த பணிகள் சரியாக நடக்கிறதா? என்று அவர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, குமரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன், உதவி செயற்பொறியாளர் சனல்குமார், செயல் அலுவலர் சத்தியதாஸ், சுகாதார அதிகாரி முருகன், இளநிலை உதவியாளர் சண்முக சுந்தரம், மேற்பார்வையாளர் நாராயணபாலன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com