பெரம்பலூரில் மாவட்ட செஸ் போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

பெரம்பலூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட சதுரங்க கழகத்தின் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான செஸ் (சதுரங்கம்) போட்டிகள் பெரம்பலூர் மரகதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இதற்கு பெரம்பலூர் மாவட்ட சதுரங்க கழகத்தின் தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். உளுந்தூர்பேட்டை தனியார் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் ஆனந்த் போட்டியினை தொடங்கி வைத்தார். 11, 14, 17 ஆகிய வயதுகளுக்கு உட்பட்ட மாணவ- மாணவிகளுக்கு தனித்தனியாக செஸ் போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியினை அகில இந்திய சதுரங்க விளையாட்டின் நடுவர் சண்முகம் தலைமையிலான குழுவினர் போட்டியினை நடத்தினர்.

பின்னர் மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில் செஸ் போட்டிகளில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு கேடயம் மற்றும் சுழற்கோப்பை, சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதில் பள்ளியின் தாளாளர் நிருபா சரவணன், மரகதம்மாள், விஸ்டம் பள்ளி முதல்வர் பவுல், அத்தியூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அருள்நம்பி, பெரம்பலூர் மாவட்ட சதுரங்க கழகத்தின் செயலாளர் அலெக்ஸ்சாண்டர், பொருளாளர் அழகுத்துரை, இணைச் செயலாளர் (நாமக்கல்) அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com