புதுச்சேரியில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,000-ஐ கடந்தது

புதுச்சேரியில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,000-ஐ கடந்துள்ளது.
Published on

புதுச்சேரி,

இந்தியாவில் மின்னல் வேகத்தில் கொரோனா தொற்று பரவி வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு முதலில் கட்டுக்குள் இருந்தது. இதையடுத்து வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களால் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

மாநிலத்தில் நேற்று வரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 946 ஆக இருந்தது.

இந்நிலையில் புதுச்சேரியில் இன்று ஒரேநாளில் மேலும் 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதி இருப்பது செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,011 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது கொரோனாவுக்கு 484 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். 448 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவர் 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com