பஞ்சாபில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று

பஞ்சாபில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Published on

சண்டிகார்,

பஞ்சாபில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. அங்கு இதுவரை 9 ஆயிரத்து 792 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் 246 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்குமுன்பு பஞ்சாப் மாநில மந்திரி திரிபித் ராஜேந்தர்சிங் பஜ்வாவுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மேலும் அவரது மனைவி, மகனுக்கும் கொரோனா இருப்பது உறுதியானது. இதற்கிடையே பஞ்சாபில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேருக்கு தொற்று இருப்பது நேற்று உறுதியானது.

இதுகுறித்து முதல்-மந்திரி அம்ரிந்தர் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில், காங்கிரசை சேர்ந்த பாக்வாரா தொகுதி எம்.எல்.ஏ. பாலவிந்தர்சிங் டாலிவால் மற்றும் டார்ன்தேரன் தொகுதி எம்.எல்.ஏ. தரம்பீர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இருவரும் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com