

சேலம்,
சேலம் பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சதாசிவம். இவர் அந்த பகுதியில் கார் மெக்கானிக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் வேலை முடிந்து கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் மறுநாள் கடைக்கு வந்து பார்த்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நோட்டுக்கள் மற்றும் பேப்பர்கள் சிதறி கிடந்தன. பின்னர் பீரோவை சோதனை செய்த போது அதில் வைக்கப்பட்டு இருந்த ரூ.90 ஆயிரம் திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து அவர் பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். சதாசிவத்தின் பக்கத்து கடை உரிமையாளர்களிடமும் விசாரணை நடத்தினர். இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.