தென்காசியில் பள்ளி மாணவ–மாணவிகளின் காந்தி ஜெயந்தி பேரணி

தென்காசியில் அகில இந்திய காந்திய இயக்கம் சார்பில், பள்ளி மாணவ–மாணவிகளின் காந்தி ஜெயந்தி பேரணி நடைபெற்றது.
Published on

தென்காசி,

தென்காசியில் அகில இந்திய காந்திய இயக்கம் சார்பில், பள்ளி மாணவமாணவிகளின் காந்தி ஜெயந்தி பேரணி நடைபெற்றது.

காந்தி ஜெயந்தி பேரணி

அகில இந்திய காந்திய இயக்கம் தென்காசி வட்டத்தின் சார்பில் தென்காசியில் நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளின் பேரணி நடைபெற்றது. காசி விசுவநாத சுவாமி கோவில் முன்பு இருந்து பேரணி தொடங்கியது. பேரணிக்கு இயக்கத்தின் தலைவர் விவேகானந்தன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். துணை தலைவர் செய்யது சுலைமான், மகளிரணி தலைவி பேராசிரியை விஜயலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி வட்ட தலைவர் கணேஷ் பாபு, தென்காசி வட்ட வளர்ச்சி பணிக்குழு தலைவர் பரமேஸ்வரன், ஓய்வு பெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர கிருஷ்ணன், ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளின் உரிமையாளர்கள் கூட்டமைப்பு மாநில செயலாளர் வைகை குமார், ஆசிரியர் கணேசமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேரணி சுவாமி சன்னதி பஜார், அம்மன் சன்னதி பஜார், ரத வீதிகள் வழியாக வந்து காந்தி சிலையை அடைந்தது. அங்கு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த பேரணியில் பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பண்பொழி திருமலைக்குமாரசுவாமி பள்ளி, சுந்தரபாண்டியபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, தென்காசி மஞ்சம்மாள் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கீழப்புலியூர் இந்து மேல்நிலைப்பள்ளி, மேலகரம் இம்மானுவேல் மெட்ரிக் பள்ளி, தென்காசி நேரு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் என்.சி.சி., என்.எஸ்.எஸ் மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். மாணவ மாணவிகள் தங்களது கைகளில் காந்திய சிந்தனை குறித்த வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை வைத்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com