சென்னை
சென்னை ராயப்பேட்டையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் புதிய தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது. அலுவலகத்தை கடசியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது அதற்கு முன்பாகவே சசிகலா சிறையிலிருந்து வெளியில் வந்து விடுவார். சட்டமன்றத் தேர்தலில் எங்களுக்கு ஆதரவாகவே சசிகலா இருப்பார்.
மக்கள் செல்வாக்கு உள்ள அமமுகவுக்கு பிரஷாந்த் கிஷோரெல்லாம் தேவையில்லை. 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியிலும், தென் மாவட்டங்களில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியிலும் நான் போட்டியிடுவேன்
பெரியார், அண்ணாவைப்போல் நடிகர் ரஜினிகாந்துக்கும் ஆட்சி அதிகாரம் பற்றி கருத்து கூறும் சுதந்திரம் இருக்கிறது. ரஜினியின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து என கூறினார்.