அயோத்தி,
அயோத்தி வழக்கில் ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தவர்களில் முக்கியமானவர், இக்பால் அன்சாரி. இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து தற்போது முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மறு ஆய்வு மனு தாக்கல் செய்வதற்கு இவர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் பேட்டியளித்த அவர், அயோத்தி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனு செய்வதால் எந்த பலனும் கிடைக்காது. இதே தீர்ப்புதான் மீண்டும் வரும். மாறாக, மறு ஆய்வு மனு செய்வதன் மூலம் தற்போதைய நல்லிணக்க சூழல்தான் கெட்டுவிடும் என்று கூறினார்.
மறு ஆய்வு செய்யும் விவகாரத்தில் முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் கருத்தில் இருந்து தான் மாறுபடுவதாக கூறிய இக்பால் அன்சாரி, இந்த பிரச்சினையை இந்த புள்ளியிலேயே நிறுத்த விரும்புவதாகவும் தெரிவித்தார்.