சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளதாவது:-
ஆந்திராவை ஒட்டியுள்ள வங்கக் கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழக கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும், புதுவையிலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மாலை அல்லது இரவில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 1 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.