நடப்பு 2019-ஆம் ஆண்டில் நிறுவனங்கள் கைமாறும் மதிப்பு 5,210 கோடி டாலராக இருக்கும் - ஆய்வறிக்கையில் தகவல்

இந்தியாவில், நடப்பு 2019-ஆம் ஆண்டில் நிறுவனங்கள் கைமாறும் மதிப்பு 5,210 கோடி டாலர் அளவிற்கு இருக்கும் என ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
நடப்பு 2019-ஆம் ஆண்டில் நிறுவனங்கள் கைமாறும் மதிப்பு 5,210 கோடி டாலராக இருக்கும் - ஆய்வறிக்கையில் தகவல்
Published on

அனுபவ அறிவு

ஒரு குறிப்பிட்ட துறையைச் சேர்ந்த நிறுவனம், வேறு ஒரு புதிய துறையில் ஈடுபட விரும்பும்போது அத்துறையில் ஏற்கனவே செயல்பட்டு வரும் நிறுவனம் ஒன்றை கையகப்படுத்துவதன் மூலம் அத்துறையில் எளிதாக களம் இறங்க முடிகிறது. இதனால், தொழில்நுட்பங்கள் மற்றும் அனுபவ அறிவு போன்றவற்றை எளிதாகப் பெற்றுக் கொள்வதுடன், கால விரயத்தை தவிர்த்து விரைவாக ஆதாயம் ஈட்ட முடிகிறது.

விறுவிறுப்பு இல்லை

நடப்பாண்டில் இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கைகளில் அதிக விறுவிறுப்பு இல்லை. எனினும் இந்தப் பின்னடைவு தற்காலிகமானது என்று கூறப்படுகிறது. பல்வேறு துறைகளில் அன்னிய முதலீட்டு விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் சரக்குகள், சேவைகள் வரி அமல்படுத்தப்பட்டுள்ளது. குறைந்த விலை குடியிருப்புத் திட்டங்களில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இது போன்ற பல காரணங்களால் இனி வரும் காலங்களில் இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கைகள் அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், 2019 காலண்டர் ஆண்டில் நிறுவனங்கள் மத்தியில் நடைபெறும் இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கைகளின் மொத்த மதிப்பு 5,210 கோடி டாலராக இருக்கும் என பேக்கர் மெக்கின்சே நிறுவனம் முன்னறிவிப்பு செய்துள்ளது. உலக அளவில், நடப்பாண்டில், நிறுவனங்கள் கைமாறும் மதிப்பு 2.8 லட்சம் கோடி டாலராக இருக்கும் என அதன் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைத்தல்

ஒரு நிறுவனம் குறுகிய காலத்தில் துரித வளர்ச்சி காண விரும்பும்போது இணைத்தல், கையகப்படுத்துதல் நடவடிக்கையில் இறங்குகிறது. கையகப்படுத்துதல் என்பது முற்றிலும் தொடர்பில்லாத இரண்டு நிறுவனங்களுக்கு இடையே நடைபெறுகிறது. ஏதோ ஒரு வகையில் ஏற்கனவே தொடர்புள்ள நிறுவனம் ஒன்றுடன் நடைபெறுவது இணைத்தல் ஆகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com