மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் உதவி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது.
மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் உதவி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது. இதனை தேர்தல் பொது பார்வையாளர் ராம்ராவ் போன்ஸ்லே மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிரபாகர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இந்த பயிற்சி வகுப்பில், வாக்குச்சாவடிகளில் நியாயமான, சுதந்திரமான வாக்குப்பதிவு நடைபெற செய்வதே தலைமை அலுவலர் மற்றும் பிற வாக்குச்சாவடி அலுவலர்களின் தலையாய கடமையாகும். வாக்குச்சாவடியில் நடக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த தேர்தல் விதிகளின்படி முழு அதிகாரம் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு நாளன்று வாக்குப்பதிவு அலுவலர்கள் வாக்காளர்களின் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ள வேண்டும். பயிற்சியின் போது வாக்குப்பதிவு எந்திரங்களை சந்தேகம் நீங்கும் வரை இயக்கி பார்த்துகொள்ள வேண்டும். மண்டல அலுவலரின் பெயர், செல்போன் எண் ஆகியவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும். பச்சை தாள் முத்திரை, சிறப்பு அட்டை மற்றும் முகவரி அட்டை ஆகியவற்றை பயன்படுத்தும் முறை, எங்கெங்கு பயன்படுத்த வேண்டும். சட்டம், ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டால் யாருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்கிற விவரங்களை தெரிந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பர்கூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,, சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தேன்கனிக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடந்த பயிற்சியில் மாவட்டம் முழுவதும் 5ஆயிரத்து 879 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் உதவி அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, கிருஷ்ணகிரி வருவாய் உதவி கலெக்டர் சரவணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com