கொரோனா பீதிக்கு மத்தியில்: டெங்கு காய்ச்சலால் 3 வயது பெண் குழந்தை பலி

சென்னையை அடுத்த ஆலந்தூர், கொரோனா பீதிக்கு மத்தியில் டெங்கு காய்ச்சலால் 3 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
கொரோனா பீதிக்கு மத்தியில்: டெங்கு காய்ச்சலால் 3 வயது பெண் குழந்தை பலி
Published on

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த ஆலந்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட நங்கநல்லூர் கே.கே.நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவர், அண்ணாசாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் பணியாற்றி வந்தார். கொரோனா ஊரடங்கால் தற்போது வேலை இல்லாமல் வீட்டில் உள்ளார். இவருடைய மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள்.

இதில் இவர்களது 3 வயதான மகள் ஆதிராவை, கொரோனா தொற்று காரணமாக வெளியே எங்கும் விடாமல் வீட்டிலேயே விளையாட வைத்து பாதுகாத்து இருந்தனர். கடந்த சில நாட்களாக குழந்தை ஆதிராவுக்கு தொடர் காய்ச்சல் ஏற்பட்டது. இதற்காக மடிப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் கைவிரித்ததால் மேல் சிகிச்சைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள மற்றொரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு குழந்தைக்கு கொரோனா தொற்று இருக்குமா? என்ற சந்தேகத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில், குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் அதிகமாக இருப்பதாக தெரியவந்தது. ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை ஆதிரா நேற்று பரிதாபமாக உயிரிழந்தது.

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றாமல் மக்கள் அச்சத்தில் உள்ளனர். கொரோனா பீதிக்கு மத்தியில் டெங்கு காயச்சலுக்கு 3 வயது குழந்தை பலியான சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com