பிளஸ்-2 தேர்வில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 86.14 சதவீதம் தேர்ச்சி கடந்த ஆண்டை விட 1.29 சதவீதம் அதிகரிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை எழுதிய அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளில் 86.14 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு 1.29 சதவீதம் தேர்ச்சி அதிகரித்து உள்ளது.
Published on

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் 101 அரசு பள்ளிகளை சேர்ந்த 11,158 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதினார்கள். இவர்களில் 9,612 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். தேர்ச்சி சதவீதம் 86.14 ஆகும். கடந்த ஆண்டு இந்த மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை எழுதிய அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளில் 84.85 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

தர்மபுரி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் மற்றும் அரசு பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டில் அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் பிளஸ்-2 தேர்ச்சி 1.29 சதவீதம் அதிகரித்து உள்ளது.

கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்களில் 81.15 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி 81.96 சதவீதமாக அதிகரித்து உள்ளது. இதேபோல் கடந்த ஆண்டு தேர்வு எழுதிய மாணவிகளில் 88.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இந்தஆண்டு 89.53 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர்களை விட மாணவிகள் 7.57 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்று சாதனை படைத்து உள்ளனர்.

மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளுக்கு அங்கு படித்த மாணவ-மாணவிகள் சென்றனர். அங்குள்ள அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டிருந்த தேர்வு முடிவு தொடர்பான விவரங்களை ஆர்வத்துடன் பார்வையிட்டனர். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகளை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com