சாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 3 போலீசாருக்கும் நீதிமன்ற காவல்

சாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 3 போலீசாரையும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 3 போலீசாருக்கும் நீதிமன்ற காவல்
Published on

தூத்துக்குடி,

சாத்தான் குளம் தந்தை மகன் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் 3 போலீசார் தூத்துக்குடி அரசு பொது மருத்துவமனைக்கு சிபிசிஜடி போலீசார். அழைத்துச் சென்றனர். அங்கு தந்தை மகன் கொலை வழக்கில் கைதான எஸ்.ஐ பாலகிருஷ்ணன், தலைமைக்காவலர் முருகன், ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோருக்கு அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

பின்னர் மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட மேலும் 3 போலீசாரும், முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஹேமா முன் ஆஜர் படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் சாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 3 போலீசாரையும் ஜூலை 16ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சிறையில் அடைக்குமாறு நீதிபதி ஹேமா உத்தரவிட்டுள்ளார். நீதிபதியின் உத்தரவை தொடர்ந்து 3 பேரும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்

இந்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை சிபிசிஜடி போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும்.என்று கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதாசனுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com