திருக்கோவிலூர் பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் உள்பட 14 பேருக்கு கொரோனா

திருக்கோவிலூர் பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் உள்பட 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருக்கோவிலூர் பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் உள்பட 14 பேருக்கு கொரோனா
Published on

திருக்கோவிலூர்,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதன்படி கொரோனா வைரசால் நேற்று முன்தினம் வரை 299 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் 238 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இந்த நிலையில் வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதிக்கு வந்தவர்கள் மற்றும் கொரோனா பாதிப்புடையவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என சிலரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளிவந்தது. இதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த திருக்கோவிலூரை சேர்ந்த எல்.ஐ.சி. ஏஜெண்டு மற்றும் அவரது மனைவி, மகன் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் சென்னையில் இருந்து நெடுமுடையான், கனகனந்தல், முடியனூர், ஆலூரை சேர்ந்த 5 பேருக்கும், ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வந்த டி.கொடியூர் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரையும் சிகிச்சைக்காக சுகாதாரத்துறையினர் டி.அத்திப்பாக்கத்தில் உள்ள தனிமைப்படுத்தும் மையத்திற்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து இவர்கள் அனைவரும் மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி தனியார் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டுக்கு மாற்றப்படுவார்கள் என திருக்கோவிலூர் தாசில்தார் சிவசங்கரன் தெரிவித்தார்.

இதேபோல் மராட்டியத்தில் இருந்து வந்த திருக்கோவிலூர் அடுத்த கண்டாச்சிபுரம் அருகே உள்ள கணக்கன்குப்பம் கிராமத்தை சேர்ந்த 3 பேருக்கும், வி.புத்தூர் கிராம நிர்வாக அலுவலர் ஒருவருக்கும், கண்டாச்சிபுரத்தை சேர்ந்த பால் வியாபாரி ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இவர் களை சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறையினர் சேர்த்தனர். இந்த தகவலை கண்டாச்சிபுரம் வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com