புதுடெல்லி
கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 15-ந் தேதி இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.
இதை தொடர்ந்து இந்தியாவின் நில எல்லைப் பகுதிகளிலும், வான்வெளி மற்றும் கடற்பகுதிகளிலும் சீனாவின் ஊடுருவல் ஏதும் இருக்கிறதா என்பது தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சீனா அத்துமீறி தாக்குதல் நடத்தினால் பதில் தாக்குதல் நடத்துவதற்கு இந்திய ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது\
மேற்கு, நடுத்தர அல்லது கிழக்குத் துறைகளில் அத்துமீறல்களைத் தடுக்க இந்தியா தனது சிறப்பு படைகளை நிறுத்தியுள்ளது என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
கிழக்கு லடாக்கில் நான்கு இடங்களில் சீனா, நேபாள எல்லைகளில் ஆளில்லா விமான கண்காணிப்பை இந்தியா அதிகரித்துள்ளது.
இராணுவம் மற்றும் தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு (என்.டி.ஆர்.ஓ) ஆகியவை இப்பகுதியில் அதிக கண்காணிப்பு ஆள் இல்லா விமானங்களை நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. அதிக ஆள் இல்லா விமானங்களை பெறுவதற்கு இராணுவத்திற்கு மிக உயர்ந்த மட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு பயன்படுத்தும் இஸ்ரேலிய ஹெரான் நடுத்தர உயரமுள்ள நீண்ட ஆள் இல்லா விமானம் இப்பகுதியின் தொழில்நுட்ப கண்காணிப்பை வழங்குகிறது.இஸ்ரேல் அல்லது அமெரிக்காவிடமிருந்து ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானங்களை வாங்கவும் இந்தியா திட்டமிட்டு உள்ளது
சீன ராணுவம் ஆள் இல்லா ஆயுத விமானம் பிரிவு ஒன்றை கொண்டுள்ளது;
கடந்த பத்தாண்டுகளாக வடக்குப் பகுதியில் பயிற்சி பெற்ற சிறப்புப் படைகள் இப்போது எல்லை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. இந்திய மலை துருப்புக்கள் 1999 கார்கில் போரின் போது நிரூபிக்கப்பட்டபடி, கெரில்லாப் போர் மற்றும் உயர் போரிப் பயிற்சி பெற்றவர்கள் ஆவார்கள்.