வெளிநாட்டு பயணிகளுக்கு கேரளாவில் புதிய கட்டுப்பாடுகள்

கேரளாவுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
Published on

திருவனந்தபுரம்,

ஐரோப்பா, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு 7 நாள் தனிமைப்படுத்தலை இந்தியா வலியுறுத்தி உள்ளது. மேலும் இங்கிலாந்தில் இருந்து வரும் மக்கள் கட்டாயமாக 10 நாள்களுக்கு தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டுப்பாடுகள், அக்டோபர் 4ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளன. வெளிநாட்டு பயணிகள் தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் செலுத்தாவிட்டாலும், விமான நிலையத்தில் ஆர்டி - பிசிஆர் சோதனை மேற்கொள்ள வேண்டும். மாதிரிகள் சோதனையில் கொரோனா இல்லை என்று தெரியும்பட்சத்தில், 14 நாள்கள் வரை தங்களை தானே கண்காணித்து வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி கேரளாவுக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த விவரங்களை மாநில அரசிடம், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது. இதை, கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் உறுதிப்படுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com