எல்லா இடங்களிலும் இந்தியா மரியாதை இழந்து வருகிறது - ராகுல்காந்தி குற்றச்சாட்டு

எல்லா இடங்களிலும் இந்தியா மரியாதை இழந்து வருகிறது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
Published on

புதுடெல்லி,

சாபஹர் ரெயில் பாதை திட்டம் தொடர்பாக இந்தியா-ஈரான் இடையே 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. சாபஹரில் இருந்து ஆப்கானிஸ்தான் எல்லை வழியாக ஜாகேதான்வரை ரெயில் பாதை அமைக்க இத்திட்டம் வகை செய்கிறது.

ஆனால், இந்தியாவிடம் இருந்து நிதி வரவில்லை என்று கூறி, இந்த திட்டத்தை சொந்தமாக செயல்படுத்தப் போவதாக ஈரான் அறிவித்துள்ளது.

இந்நிலையில், இதுபற்றிய பத்திரிகை செய்தியை இணைத்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், இந்தியாவின் சர்வதேச வியூகம் கிழிந்து தொங்குகிறது. எல்லா இடத்திலும் நாம் அதிகாரத்தையும், மரியாதையையும் இழந்து வருகிறோம். என்ன செய்வது என்று இந்திய அரசுக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com