கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 2,003 இறப்புகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகி உச்ச நிலையை தொட்டு உள்ளது.
Published on

புதுடெல்லி

கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2,003 இறப்புகளுடன் மிக உயர்ந்த ஒரு நாள் இறப்பை பதிவு செய்து உள்ளது, மொத்த இறப்பு எண்ணிக்கை 11903 ஆக உயர்ந்துள்ளது. 24 மணி நேரத்தில் 10,974 பாதிப்புகள் பதிவாகி ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 354,065 ஆக உயர்ந்து உள்ளது.

கொரோனா வைரஸ் நோயால இந்தியாவில் மார்ச் மாதத்தில் முதல் இறப்பு பதிவு செய்யப்பட்டது. அதில் இருந்து செய்யப்பட்டதிலிருந்து கிட்டத்தட்ட 100 நாட்களுக்குப் பிறகு 10,000 ஐத் தாண்டியுள்ளது.

நேற்று இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 1,672 இறப்புக்கள் மற்றும் 10,951 நோய்த்தொற்றுகள் உட்பட நாடு 2,004 இறப்புகளைச் சேர்த்தது, இது 353,853 நோய்த்தொற்றுகளில் இருந்து 11,919 ஆக உயர்ந்துள்ளது என்று எச்.டி டாஷ்போர்டு தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக மராட்டியத்தில் நேற்று ஒரே நாளில் 2,701 பேருக்கு புதியதாககொரோனாதொற்று உறுதியானதாகவும், 81 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் மாநில அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 13 ஆயிரத்தை கடந்துள்ளது.

அடுத்தபடியாக டெல்லியில் 1,859 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நாட்டிலேயே அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் அங்கு 93 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1837 ஆக உயர்ந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்தை கடந்துள்ளது. ஹரியானாவில் மேலும் 550 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

குஜராத்தில் புதியதாக 524 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 500 கடந்துள்ளது. மேற்குவங்கத்தில் மேலும், 415 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

இதேபோன்று, ராஜஸ்தானில் 235 பேருக்கும், மத்தியபிரதேசத்தில் 134 பேருக்கும், தெலங்கானாவில் 213 பேருக்கும் புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக அந்தந்த மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com