இந்திய-இலங்கை கூட்டு ராணுவ பயிற்சி தொடங்கியது

12 நாட்கள் நடைபெறும் இந்திய-இலங்கை கூட்டு ராணுவ பயிற்சி நேற்று தொடங்கியது.
Published on

கொழும்பு,

இந்தியா-இலங்கை இடையே ஆண்டுதோறும் கூட்டு ராணுவ பயிற்சி நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான இப்பயிற்சி இலங்கையில் நடக்கிறது. இதற்காக, கர்னல் பிரகாஷ் குமார் தலைமையில் 120 இந்திய ராணுவ வீரர்கள், கடந்த 2-ந் தேதி இந்திய விமானப்படை மூலம் இலங்கை சென்றனர்.

இந்நிலையில் அம்பாரையில் உள்ள போர் பயிற்சி பள்ளியில் நேற்று கூட்டு ராணுவ பயிற்சி தொடங்கியது. இது 15-ந் தேதி வரை, அதாவது 12 நாட்கள் நடக்கிறது. பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதுதான் இப்பயிற்சியின் நோக்கமாகும். இரு நாடுகளும் தங்களது அனுபவங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் என்று இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com