இந்தியாவில் பப்ஜி விளையாட்டிற்கு இன்று முதல் முற்றிலும் தடை

பப்ஜி விளையாட்டிற்கு இந்தியாவில் ஏற்கனவே தடை விதிக்கப்பட்ட போதிலும்,இன்று முதல் பயனாளிகளுக்கான அனைத்து சேவைகளும் நிறுத்தப்படுகிறது.
இந்தியாவில் பப்ஜி விளையாட்டிற்கு இன்று முதல் முற்றிலும் தடை
Published on

புதுடெல்லி,

பப்ஜி விளையாட்டிற்கு இந்தியாவில் தடை விதித்து கடந்த மாதம் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் பிற சீன அப்களை போல் இல்லாமல் ஏற்கனவே ப்பஜி அப்பை தனது மொபைல் மற்றும் கணினியில் பதிவிறக்கம் செய்து வைத்தவர்கள் அதனை தொடர்ந்து உபயோகித்து வந்தனர்.

இந்தியாவில் மட்டும் பப்ஜி விளையாட்டில் சுமார் 5 கோடி பேர் ஆக்டிவ் பயனாளிகளாக இருந்தனர். ப்பஜி விளையாட்டிற்கு அடிமையானவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வந்த நிலையில், மீண்டும் பப்ஜி விளையாட்டை இந்தியாவிற்குள் கொண்டு வரும் முயற்சியில் தென் கொரிய நிறுவனம் ஈடுபட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், இன்று முதல் இந்தியாவில் உள்ள பயனாளிகளுக்கான அனைத்து சேவைகளும் நிறுத்தப்படும் என பப்ஜி மொபைல் அப் கேம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com