டெல்லியில் காற்று மாசு, பனிமூட்டம்; விமான சேவை பாதிப்பு

டெல்லியில் குளிர்காலம் நிலவி வரும் சூழ்நிலையிலும் காற்றின் தரம் மோசமாக உள்ளது
டெல்லி,
தலைநகர் டெல்லியில் பல ஆண்டுகளாக காற்றின் தரம் மோசமாக நிலவி வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது.
டெல்லியில் குளிர்காலம் நிலவி வரும் இந்த சூழ்நிலையிலும் காற்றின் தரம் மோசமாக உள்ளது. காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முயற்சித்து வருகின்றன.
இந்நிலையில், டெல்லியில் காற்று மாசுபாடு, பனிமூட்டம் காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டெல்லியில் இன்று 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், 150 க்கும் மேற்பட்ட விமான சேவைகள் தாமதமடைந்துள்ளன. விமானங்கள் ரத்து, சேவை பாதிப்பால் பயணிகள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story






