

லக்னோ,
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதலை தொடர்ந்து, மத்திய அரசு தனது அரசிதழில் வெளியிட்டது. கடந்த 14-ந் தேதி முதல், இந்த இடஒதுக்கீடு அமலுக்கு வந்து விட்டதாக மத்திய அரசு கூறி உள்ளது.
முன்னதாக குஜராத் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் இந்த இட ஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்த முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த அம்மாநில மந்திரிசபை கூட்டத்தில் இன்று முடிவு செய்யப்பட்டது.