

புதுடெல்லி,
கடந்த 5 ஆண்டுகளில், 10 ஆயிரத்து 531 கற்பழிப்பு மற்றும் கற்பழிப்பு முயற்சி புகார்கள், தேசிய பெண்கள் ஆணையத்துக்கு வந்துள்ளன. இத்தகவலை நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், இவற்றில் பெரும்பாலானவை வடமாநிலங்களில் இருந்து பெறப்பட்டவை. உத்தரபிரதேசத்தில் இருந்து மட்டும் 6 ஆயிரத்து 987 புகார்கள் வந்துள்ளன என்றார்.