இமாசல பிரதேச கனமழையில் சிக்கி 10 மாத பெண் குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்


இமாசல பிரதேச கனமழையில் சிக்கி 10 மாத பெண் குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்
x
தினத்தந்தி 7 July 2025 5:37 AM IST (Updated: 7 July 2025 5:45 AM IST)
t-max-icont-min-icon

இமாசல பிரதேசத்தில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 74 பேர் உயிரிழந்தனர்.

சிம்லா,

இமாசல பிரதேசத்தில் பருவமழை தொடங்கியநிலையில் கடந்த சில நாட்களாக அங்கு கனமழை பெய்து வருகிறது. அங்குள்ள சிம்லா, மண்டி உள்ளிட்ட பகுதிகள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்தநிலையில் இமாசல பிரதேசத்தில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 74 பேர் உயிரிழந்தனர். காணாமல் போன 37 பேரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது. இந்தநிலையில் சிம்லாவில் வீட்டில் பெற்றோர் மற்றும் பாட்டியை வெள்ளத்துக்கு பறிகொடுத்த 10 மாத குழந்தை அதிசயமாக உயிர்பிழைத்தது.

சிம்லாவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 31). திருமணமான இவருக்கு ராதா (24) என்ற மனைவியும் நீதிகா என்ற 10 மாத குழந்தையும் உள்ளனர். தனது தாய் பூர்னாவுடன் (59) ஒரே வீட்டில் வசித்து வந்தனர். மழை வெள்ளத்தில் ரமேஷ், ராதா, பூர்னா ஆகியோர் அடித்து செல்லப்பட்டநிலையில் அண்டை வீட்டாரின் உதவியால் அந்த பெண் குழந்தை மற்றும் பத்திரமாக மீட்கப்பட்டு உயிர் பிழைத்துள்ளது. போலீஸ் அதிகாாியான பல்வந்த் என்பவர் அந்த குழந்தையை தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றி உள்ளார். அவருக்கு தற்போது பாராட்டுகள் குவிகிறது.

1 More update

Next Story