எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்; பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியது.
எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்; பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு
Published on

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான 'தி ரெசிஸ்டண்ட் பிரண்ட்' பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 9 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த தாக்குதலை தொடர்ந்து காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. பூஞ்ச், ரஜோரி பகுதியில் நடந்த இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் எல்லையில் உயிரிழந்த பொதுமக்கள் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த தாக்குதலில் 43 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com