மேற்கு வங்காளம்: எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து - 15 பேர் காயம்

விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீ விபத்து
Published on

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் மிதினிபூர் மாவட்டம் ஹல்டியா நகரில் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வர்கிறது. இங்கு கச்சா எண்ணெயில் இருந்து பெட்ரோல், டீசல், நாப்தா போன்ற எரிபொருட்கள் பிரித்து எடுக்கப்படுகின்றன.

கச்சா எண்ணெயில் இருந்து பிரித்து எடுக்கப்படும் நாப்தா எரிபொருள் நேரடியாக வாகனங்களுக்கு எரிபொருளாக பயன்படுத்தப்படாது. அதேவேளை, பிளாஸ்டிக், பெயிண்ட், மருந்துகள் போன்ற வேதிப்பொருட்களை தயாரிக்க மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

தீ விபத்து

இந்நிலையில், ஹல்டியா நகரில் உள்ள எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நாப்தா எரிபொருளை கொண்டு செல்லும் குழாயில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 15 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com