

லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் லக்னோ மாவட்டம் அலிகஞ்ச் பகுதியில் 3 மாடிகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் செல்லப்பிராணி கிளினிக் , அனிமேஷன் பயிற்சி மையம் செயல்பட்டு வருகின்றன. இந்த பயிற்சி மையத்தில் ஏராளமான மாணவ, மாணவியர் பயிற்சி பெற்று வந்தனர்.
இந்நிலையில், இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் இன்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பயிற்சி மையத்தில் இருந்த 15 மாணவர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் கட்டிடத்தில் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர். மேலும், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.