கோவில் பிரசாதம் சாப்பிட்ட 15 பேர் பலி: காதலியுடன் மடாதிபதி கைது

கோவில் பிரசாதம் சாப்பிட்ட 15 பேர் பலியான விவகாரத்தில், காதலியுடன் மடாதிபதி கைது செய்யப்பட்டார்.
கோவில் பிரசாதம் சாப்பிட்ட 15 பேர் பலி: காதலியுடன் மடாதிபதி கைது
Published on

கொள்ளேகால்,

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் சுலவாடி கிராமத்தில் உள்ள கிச்சுகுத்தி மாரம்மா கோவிலில் நடந்த விழாவில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட பிரசாதம் சாப்பிட்ட 15 பேர் பலியானார்கள். 90-க்கும் மேற்பட்டவர்களின் உடல் நலன் பாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக கோவில் நிர்வாகி மாதேசின் மனைவி அம்பிகாவை போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் சாளூர் மடத்தின் இளையமடாதிபதி இம்மாடி மகாதேவசாமிக்கும், தனக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாகவும், மாரம்மா கோவில் நிர்வாகத்தை கைப்பற்றுவதற்காக இளையமடாதிபதி கூறியதால் பக்தர்கள் சாப்பிட்ட பிரசாதத்தில் விஷம் கலந்ததாகவும் கூறினார்.இதைத்தொடர்ந்து, அம்பிகா, சாளூர் மடத்தின் மடாதிபதி மகாதேவசாமி, விஷம் கலப்பதற்காக உடந்தையாக இருந்த தொட்டய்யா, அம்பிகாவின் கணவர் மாதேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com