சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 16 வயது சிறுவனுக்கு 25 ஆண்டு சிறை!

சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சிறை
Published on

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 14 வயது சிறுமியை கற்பழித்த 16 வயது சிறுவனுக்கு 25 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்டு 21-ந் தேதி இந்த பாலியல் பலாத்கார சம்பவம் நடைபெற்றது. சித்பராக்கான் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட கிராமம் ஒன்றில் கூலி தொழிலாளி மகளான அந்த சிறுமி வீட்டில் தனியாக இருந்தார்.

வழக்குப்பதிவு

அப்போது வீட்டிற்குள் நுழைந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பாலியா கோர்ட்டு இந்த தண்டனையை அறிவித்து உள்ளது.

இதுகுறித்து மாநில அரசு சிறப்பு வக்கீல் விமல் குமார் ராவ் கூறியதாவது:-

சிறுவனுக்கு 21 வயது ஆகும் வரை காஜிபூரில் உள்ள சிறார் சீர்திருத்த மையத்தில் கண்காணிப்பில் சிறுவன் வைக்கப்பட்டு, அவருக்கான கல்வி, மன மற்றும் உடல் வளர்ச்சி உறுதிப்படுத்த வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சிறுவன் 21 வயதை அடைந்ததும் எஞ்சிய சிறை தண்டனையை அனுபவிக்க மாவட்ட சிறைக்கு மாற்றப்பட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com