டெல்லியில் சகோதரர்களுக்கு கத்திக்குத்து: கொலையில் முடிந்த தகராறு

தெற்கு டெல்லியில் உள்ள காளிந்தி காலனி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.
டெல்லியில் சகோதரர்களுக்கு கத்திக்குத்து: கொலையில் முடிந்த தகராறு
Published on

புதுடெல்லி,

டெல்லியில் சிறு தகராறில் இரு சகோதரர்கள் கொடூரமாக கத்தியால் குத்தப்பட்டதில் ஒருவர் பலியானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தெற்கு டெல்லியில் உள்ள காளிந்தி காலனி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட அதே பகுதியைச் சேர்ந்த ஷாருக் என்பவர், சகோதரர்களான கமல் கிஷோர் மற்றும் சிவம் சர்மா ஆகியோரை கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த சகோதரர்களை மீட்டு அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவர்களில் சிவம்-க்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், கமல் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளி ஷாருக்கை கொலை வழக்கின் கீழ் கைதுசெய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com