

மும்பை,
மராட்டிய அரசு 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து உள்ளது. இதில் உயர் மற்றும் தொழில் நுட்ப கல்வித்துறையின் முதன்மை செயலாளராக இருந்த ஓ.பி. குப்தா நிதித்துறை(செலவினம்) முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். பொதுநிர்வாக துறை முதன்மை செயலாளர் விகாஸ் சந்திர ரஸ்தோகி, குப்தாவிற்கு பதிலாக உயர்மற்றும் தொழில்நுட்ப கல்விதுறைக்கு மாற்றப்பட்டார். ஐ.சி.டி.எஸ் கமிஷனராக இருந்த இந்திரா மல்லோ பொது நிர்வாக துறைக்கு பணி மாற்றப்பட்டு உள்ளார்.
தற்போது புனேயில் கூடுதல் மாநகராட்சி கமிஷனராக இருந்து வந்த ரூபல் பிரகர் அகர்வால் ஐ.சி.டி.எஸ். கமிஷனராக பதவி உயர்வு பெற்றார். கோலாப்பூர் மாவட்ட கலெக்டர் தவுலத் தேசாய் மருத்துவ கல்வி மற்றும் மருந்துகள் துறை இணை செயலாளராக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதே போல மற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கலெக்டர் மற்றும் மாநகராட்சிகள் அளவில் இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனர்.