மகாராஷ்டிராவில் 2017ல் முதல் 6 மாதங்களில் 2,965 சிறுமிகள் மாயம்: முதல் மந்திரி பட்னாவிஸ் தகவல்

மகாராஷ்டிராவில் இவ்வருடத்தின் முதல் 6 மாதங்களில் 2,965 சிறுமிகள் காணாமல் போயுள்ளனர் என முதல் மந்திரி பட்னாவிஸ் இன்று தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் 2017ல் முதல் 6 மாதங்களில் 2,965 சிறுமிகள் மாயம்: முதல் மந்திரி பட்னாவிஸ் தகவல்
Published on

நாக்பூர்,

மகாராஷ்டிர சட்டசபையில் பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. ரந்தீர் சாவர்கர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு எழுத்துப்பூர்வ முறையில் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதிலளித்துள்ளார். அதில், கடந்த 2016ம் ஆண்டில் ஜனவரி 1ந்தேதி முதல் ஜூன் 30 வரையிலான முதல் 6 மாதங்களில் 2,881 சிறுமிகள் காணாமல் போயுள்ளனர்.

இந்த எண்ணிக்கை இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் 2,965 என உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உள்துறை பதவியையும் வகிக்கும் பட்னாவிஸ் கூறும்பொழுது, இந்த வழக்கில் குறிப்பிட்ட எந்த கும்பல் மீதும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இதுபோன்ற செயல்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி 12 காவல் துறைகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

காணாமல் போன சிறுமியை கண்டுபிடிக்க மத்திய அரசு வலைதள முகவரி ஒன்றை உருவாக்கியுள்ளது என கூறியுள்ளார்.

இதேபோன்று ஆபரேசன் முஸ்கான், ஆபரேசன் ஸ்மைல் போன்ற சிறப்பு திட்டங்களால் கடந்த 2016ம் ஆண்டின் ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரையில் காணாமல் போன சிறுமிகளில் 1,631 பேர் கண்டறியப்பட்டு உள்ளனர். இத்திட்டத்தின் உதவியால் இந்த வருடம் 645 சிறுமிகள் கண்டறியப்பட்டு உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com