லடாக்: ராணுவ ஹெலிகாப்டர் மலையில் விழுந்து விபத்து

ராணுவ அதிகாரிகள் 3 பேரும் செல்பி புகைப்படம் எடுத்துள்ளனர்.
லடாக்: ராணுவ ஹெலிகாப்டர் மலையில் விழுந்து விபத்து
Published on

லடாக்,

லடாக் யூனியன் பிரதேசத்தில் சீனாவுடனான சர்வதேச எல்லைப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்புப்பணியில் ராணுவ ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ராணுவ ஹெலிகாப்டர்கள் சரக்குகளை ஏற்றிச்செல்லவும், அதிகாரிகள் பயணிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில், கடந்த 20ம் தேதி லடாக்கின் லே பகுதியில் சிடல் லைட் ரக ராணுவ ஹெலிகாப்டர் சென்றுகொண்டிருந்தது. அந்த ஹெலிகாப்டரில் ராணுவ மேஜர் ஜெனரல் சச்சின் மேதா, 2 ராணுவ அதிகாரிகள் பயணித்தனர்.

லே பகுதியில் சென்றபோது ராணுவ ஹெலிகாப்டர் மலையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராணுவ அதிகாரிகள் 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து அறிந்த பாதுகாப்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த 3 ராணுவ அதிகாரிகளையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். லேசான காயம் ஏற்பட்ட 3 பேரும் சிகிச்சைக்குப்பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

அதேவேளை, ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதியில் இருந்து ராணுவ ஜெனரல் உள்பட ராணுவ அதிகாரிகள் 3 பேரும் செல்பி புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த செல்பி புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் குறித்து ராணுவ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com