ஐ.பி.எல். டிக்கெட்டை கள்ளச்சந்தையில் விற்ற 3 பேர் கைது

டெல்லியின் அருண்ஜெட்லி மைதானத்திற்கு வெளியே அதிக விலைக்கு டிக்கெட்டுகளை விற்றதாக 3 நபர்கள் பிடிபட்டனர்.
ஐ.பி.எல். டிக்கெட்டை கள்ளச்சந்தையில் விற்ற 3 பேர் கைது
Published on

புதுடெல்லி,

டெல்லியின் அருண்ஜெட்லி மைதானத்திற்கு வெளியே அதிக விலைக்கு டிக்கெட்டுகளை விற்றதாக 3 நபர்கள் பிடிபட்டனர். இவர்களிடமிருந்து 25-க்கும் மேற்பட்ட ஐ.பி.எல். டிக்கெட்டுகள், ரொக்கப்பணம் மற்றும் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ரூ.1,500 மதிப்புள்ள டிக்கெட்டுகளை ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் ஆன்லைனில் மொத்தமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தும், போலி டிக்கெட்டுகளை தயாரித்தும் ஏமாற்றி வந்துள்ளனர்.

இதை தொடர்ந்து, போட்டி நடைபெறும் மைதானங்களுக்கு வெளியே அறிமுகமில்லாத நபர்களிடம் டிக்கெட் வாங்க வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com