ஒரே கிராமத்தை சேர்ந்த அண்ணன், தங்கை உள்பட 3 சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி பலி

மழையினால் குட்டையில் தண்ணீர் நிரம்பியிருந்ததால், ஆழம் தெரியாமல் 3 சிறுவர்களும் தண்ணீரில் மூழ்கினர்.
மூழ்கி பலி
Published on

நகரி,

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் பீம்கள் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ். இவருடைய மகன் ஹரிஷ் (வயது 10), மகள் வர்ஷினி (5) இவர்களுடன் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரது மகன் அரவிந்த் (4) ஆகிய 3 சிறுவர்களும் நேற்று முன்தினம் வீட்டின் அருகே விளையாடச் சென்றுள்ளனர்.

அப்போது அந்த பகுதியில் உள்ள குட்டையில் குளிப்பதற்காக 3 பேரும் தண்ணீரில் இறங்கியுள்ளனர். சமீபத்தில் மண் தோண்டப்பட்டதால் அந்த குட்டையில் ஆழமான பள்ளங்கள் இருந்துள்ளன. தற்போதைய மழையினால் குட்டையில் தண்ணீர் நிரம்பியிருந்ததால், ஆழம் தெரியாமல் 3 சிறுவர்களும் தண்ணீரில் மூழ்கினர்.

மிட்பு

இதுகுறித்த தகவலின்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு 3 சிறுவர்களின் உடல்களும் பிணமாக மீட்கப்பட்டன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தங்கை உள்பட 3 சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி பலி யான சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com