ரிஷிகேஷ் அருகே உஜ்ஜையினி எக்ஸ்பிரஸ் ரெயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டது

பெட்டியில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் உயிர்சேதம் மற்றும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.
ரிஷிகேஷ் அருகே உஜ்ஜையினி எக்ஸ்பிரஸ் ரெயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டது
Published on

ரிஷிகேஷ்,

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் அருகே உள்ள காண்ட் கான் (Khand Gaon) பகுதியில், நேற்று இரவு உஜ்ஜையினி எக்ஸ்பிரஸ் ரெயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகின. நேற்று இரவு சுமார் 9:40 மணியளவில், யோக் நகரி ரெயில் நிலையம் அருகே இந்த ரெயில் பயணிகள் யாருமின்றி காலியாக ரெயில்வே பராமரிப்பு பகுதி மாற்றப்பட்டுக் கொண்டிருந்தது.

அப்போது, ரெயிலின் என்ஜின் ஷண்டிங் பாதையின் முனையில் அமைந்துள்ள பஃபர் (Buffer - இறுதி முனை) மீது பலத்த வேகத்துடன் மோதியுள்ளது. இதன் காரணமாக ஏற்பட்ட கடுமையான அழுத்தத்தால், ரெயிலின் ஒரு பெட்டி தண்டவாளத்தை விட்டு தூக்கி வீசப்பட்டதுடன், மற்றொரு பெட்டி நடுப்பகுதியில் வளைந்தது.

இந்த விபத்தில் ரெயிலின் மொத்தம் மூன்று பெட்டிகள் சேதமடைந்துள்ளன. பராமரிப்புக்காக ரெயில் கொண்டு செல்லப்பட்டபோது பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் மற்றும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டதாக ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com