பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து - 3 பேர் பலி

விபத்தில் 30 பேர் காயமடைந்தனர்
பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து - 3 பேர் பலி
Published on

போபால்,

மத்தியபிரதேசத்தின் இந்தூரில் இருந்து மெஹவ் நகருக்கு நேற்று இரவு பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 50க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.

சிம்ரோல் நகர் அருகே பெரு ஹட் பகுதியில் மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 30 பேர் காயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் , காயமடைந்தவர்களை மீட்டு இந்தூர் மருத்துவமனையில் அனுமதித்தார். இதில், 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்- மந்திரி மோகன் அறிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com