மேம்பாலம் அருகே நிறுத்தப்பட்ட காரில் பெண் உள்பட 3 பேர் சடலமாக மீட்பு; போலீசார் விசாரணை

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேம்பாலம் அருகே நிறுத்தப்பட்ட காரில் பெண் உள்பட 3 பேர் சடலமாக மீட்பு; போலீசார் விசாரணை
Published on

டெல்லி,

தலைநகர் டெல்லியில் உள்ள பிரகதி நகரில் மேம்பாலம் உள்ளது. மிகவும் பரபரப்பான இந்த மேம்பாலத்தில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன.

இந்நிலையில், பிரகதி மேம்பாலம் அருகே சந்தேகத்திற்கு இடமாக இன்று நீண்டநேரமாக கார் நிறுத்தப்பட்டிருந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், கார் கதவை திறந்து சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் பெண் உள்பட 3 பேர் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, 3 பேரின் உடலையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், 3 பேரும் தற்கொலை செய்துகொண்டனரா? கொல்லப்பட்டனரா? எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com