

புதுடெல்லி,
ககன்யான் விண்கலத்தின் 'குழு தொகுதி' (குரூவ் மாடுல்) அமைப்புகளுக்கான 3 முக்கிய சோதனைகள் வெற்றிகரமாக நடந்தது. இதில் முதல் சோதனையானது, விண்கலம் கடலில் விழுந்த பிறகு குழு தொகுதியை நேர் நிலையில் நிறுத்தி வைத்திருப்பதை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டது.
2-வது சோதனையானது, விண்வெளி வீரர்கள் தங்கும் 'குழு தொகுதி' மற்றும் மின்சாரம் மற்றும் உந்துவிசையை வழங்கும் 'சேவை தொகுதி' (சர்வீஸ் மாடுல்) ஆகியவற்றுக்கு இடையேயான இணைப்பாகச் செயல்படும் 'அம்பிலிக்கல்' பொறிமுறையின் பிரிப்புச் சோதனையாகும். இதுவும் வெற்றிகரமாக நடந்தது.
3-வது சோதனையானது. 'உச்சப் பகுதி உறை' (அபெக்ஸ் கவர்) பிரிப்பு நிகழ்வின்போது குழு தொகுதியின் கட்டமைப்பு உறுதித்தன்மையை உறுதிப்படுத்துவதாகும். அதுவும் வெற்றிகரமாக முடிந்ததாக இஸ்ரோ கூறி உள்ளது.