ஜார்கண்ட்: ரூ.1.30 லட்சத்திற்கு விற்கப்பட்ட 3 வயது குழந்தையை பத்திரமாக மீட்ட போலீசார்

ஜார்கண்ட் மாநிலத்தில் ரூ.1.30 லட்சத்திற்கு விற்கப்பட்ட 3 வயது குழந்தையை போலீசார் பத்திரமாக மீட்டனர்.
image credit: ndtv.com
image credit: ndtv.com
Published on

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் மாவட்டத்தில் தனது 3 வயது ஆண் குழந்தை காணாமல் போயுள்ளதாக குழந்தையின் பெற்றோர் கடந்த ஜூன் 20 ஆம் தேதி போலீசில் புகார் அளித்தனர்.

குழந்தை கடைசியாக அவரது அத்தையின் வீட்டில் இருந்தது என்பதை அறிந்த பின்னர், போலீசார் அவரிடம் விசாரித்தபோது, குழந்தை பீகாரில் மூன்று குழந்தைகளைக் கொண்ட ஒரு பெண்ணுக்கு விற்கப்பட்டதாக கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக இந்த குழந்தையை விற்பனைக்கு வாங்கியதும் தெரியவந்தது.

இதையடுத்து, பீகாரின் ஜெகனாபாத் மாவட்டத்தின் மக்தும்பூர் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை, நேற்று இரவு ஜார்கண்டின் ஹசாரிபாக் மாவட்டத்தின் முஃபாசில் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெற்றோரிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேரு கிராமத்தில் உள்ள குழந்தையின் அத்தை வீட்டில் இருந்து மொத்தம் ரூ.1.10 லட்சம் ரொக்கம் மீட்ட போலீசார், குற்றம் சாட்டப்பட்ட அத்தை மற்றும் குழந்தையை ரூ.1.30 லட்சத்திற்கு வாங்கிய பெண்ணும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com