

ஐதராபாத்,
ஐதராபாத் நகரத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 3 வாலிபர்கள் உயிரிழந்தனர்.
ஐதராபாத் நகரத்தில் பாசுபள்ளி பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்குள்ள கழிவுநீர் தொட்டியை (செப்டிக் டேங்க்) சுத்தம் செய்யும் பணியில் தனியார் நிறுவனத்தை சோந்த சிலர் ஈடுபட்டனர். அப்போது மூச்சுத்திணறி 3 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மரணம் அடைந்தவர்கள் எச்சுமன் (வயது 24), சுரேஷ்(25), பவன்(25) என்பது தெரிய வந்தது. அவர்களது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.