மராட்டியத்தில் நஞ்சான உணவை சாப்பிட்ட 31 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி

மராட்டியத்தின் புனே நகரில் உள்ள பயிற்சி மைய மாணவிகள் 31 பேர் நஞ்சான உணவை சாப்பிட்டதில் உடல்நல பாதிப்பு அடைந்து உள்ளனர்.
மராட்டியத்தில் நஞ்சான உணவை சாப்பிட்ட 31 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி
Published on

புனே,

மராட்டியத்தின் புனே நகரில் குஸ்காவன் பகுதியில் நவ் குருகுல் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் படித்து வந்த மாணவிகள் சிலர் கடந்த 25ந்தேதி நடந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் பரிமாறப்பட்ட உணவை சாப்பிட்டதில் மாணவிகள் 31 பேருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்கள் அனைவரின் உடல்நலம் சீராக உள்ளது. இதுபற்றி உள்ளூர் நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது. உணவு மற்றும் நீர் மாதிரிகளை சேகரித்து வர குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com