10-ம் வகுப்பு தேர்வில் 35 லட்சம் மாணவர்கள் தோல்வி - மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை

நாடு முழுவதும் 2021-22 ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 35 லட்சம் மாணவர்கள் தோல்வி அடைந்திருப்பதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
10-ம் வகுப்பு தேர்வில் 35 லட்சம் மாணவர்கள் தோல்வி - மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் 2021-22 ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 35 லட்சம் மாணவர்கள் தோல்வி அடைந்திருப்பதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் கொரோனா தாக்கம் கடுமையாக இருந்தது. இந்த காலகட்டத்தில் மத்திய அரசின் பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடத்தப்பட்டது. இதில் 27 லட்சத்து 50 ஆயிரம் பேர் தோல்வியடைந்தனர். மேலும் 7.5 லட்சம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

திறந்தவெளி பள்ளி திட்டத்தின் கீழ் நடந்த தேர்வுகளில் 4.5 லட்சம் மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர். 11 மாநிலங்களில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகளில் 30 லட்சம் மாணவர்கள் மத்திய மாநில பாடத்திட்ட தேர்வுகளில் பங்கேற்கவில்லை. பீகார், மத்திய பிரதேசம், குஜராத், தமிழ்நாடு, ராஜஸ்தான், கர்நாடகா, அசாம், மேற்குவங்காளம், அரியானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பொதுத்தேர்வுகளில் பங்கேற்காத மாணவர்கள் அதிகம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com