37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்

கர்நாடகத்துக்கு இதுகுறித்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
Published on

புதுடெல்லி,

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 43-வது கூட்டம் மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக நடைபெற்றது. கூட்டத்தில் 4 மாநில அதிகாரிகளும் தங்களது மாநில அணைகளின் நீர் இருப்பு மற்றும் மழை விவரங்களை பகிர்ந்தனர். தமிழ்நாடு உறுப்பினர் மற்றும் நீர்வளத்துறை அரசு செயலாளர் ஜெ.ஜெயகாந்தன் மற்றும் காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் மாநில நதிநீர்ப் பிரிவு தலைவர் இரா.சுப்பிரமணியம் ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக கலந்துகொண்டனர்.

கர்நாடக அணைகளின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்து கணிசமான அளவு தொடர்ந்து வருவதினாலும், தமிழகத்திற்கு செப்டம்பர் மாதத்திற்கு வழங்க வேண்டிய நீர் அளவான 37 டி.எம்.சி நீரை சுப்ரீம் கோர்ட்டு ஆணையின்படி கர்நாடகம் பில்லிகுண்டுலுவில் உறுதிசெய்யுமாறு தமிழ்நாடு சார்பில் ஆணையத்திடம் வலியுறுத்தப்பட்டது.

மேலாண்மை ஆணைய தலைவர் இதனை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டார். கர்நாடகத்துக்கு இதுகுறித்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com