மாநிலங்களவை நியமன எம்.பி.க்களாக 4 பேர் நியமனம்


மாநிலங்களவை நியமன எம்.பி.க்களாக 4 பேர் நியமனம்
x

மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்களாக 4 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் 12 உறுப்பினர்களை நியமன எம்.பி.க்களாக ஜனாதிபதி நேரடியாக நியமிக்கிறார். கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, சட்டம், சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு மாநிலங்களவையின் நியமன எம்.பி. பதவியை வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது.

இந்த நிலையில், மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்களாக 4 பேரை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

அதன்விவரம்:-

  • ▪️ உஜ்வால் நிகம் (பாஜக), மூத்த வழக்கறிஞர்
  • ▪️ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, வெளியுறவுத்துறை முன்னாள் செயலாளர்
  • ▪️ சதானந்தன் மாஸ்டர் (பாஜக), ஆசிரியர்
  • ▪️ மீனாக்ஷி ஜெயின், வரலாற்று ஆய்வாளர்

1 More update

Next Story